இடுகைகள்

ஞாநி

படம்
ஞா நி யின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய 'விசாரணை' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை." என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.  அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, 'இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!' என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். ...

அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு..

படம்
அம்மாவின் தேன்குழல்: அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு - எழுத்தாளர் ஜோ டி குருஸ் ஒ ரு காலத்தில் ஜமீன்தார் பிள்ளைகளுக்கும் அதன் பின்னான காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே கிடைத்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு 90களில் நமது அடித்தள மக்களின் பிள்ளைகளுக்கும் மென்பொருள் துறைமூலம் வாய்த்தது. சமுதாயத்தின் மேலடுக்குகளில் உள்ளவர்களும் பயணித்தார்கள் ஆனால் வழக்கம்போலவே கிடைத்த வாழ்வைத் தூய்த்தார்களே அல்லாது புலம்பெயர் வாழ்வை, அதன் சூழலை, பொருளாதாரச் செழுமையை, சிக்கல்களை அதன் நிகழ் தருணங்களில் கிடைக்கும் தரிசனங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்ததில்லை. தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டுமே என்ற அவர்களின் வழக்கமான இயல்பு. அக்கறையான நமது பிள்ளைகள் புலம் பெயர்ந்தபோது அந்த வாழ்வுசார் புரிதலும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு மின்னெலென பளிச்சிடும் தரிசனங்களும் அதன் சுவராஸ்யங்களும் தமிழுக்கு கொடையாக கிடைத்துவிடுகின்றன. அப்படியானதொரு கொடையாகத்தான் தம்பி மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன்குழல் என்ற இந்தத் தொகுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாசிக...

இந்தியா குறித்த ஏளனம்…

எ ழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'இந்தியா குறித்த ஏளனம்..' பதிவுக்கு நான் எழுதிய கடிதம் - அவருடைய தளத்தில்: http://www.jeyamohan.in/91987#.WPRra9J97IV என்னுடைய கடிதம்: அன்பு ஜெயமோகன் ‘இந்தியா குறித்த ஏளனம்..’  கடிதத்தைப் பார்த்தேன். பிரகாஷ் எந்த நாட்டில் வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய பின்னணியிலிருந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறியதில் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சீனர்-ஜப்பானியர்களைக் குறித்த பார்வை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்தான். இவர்கள் நல்ல வெளிநாட்டுக்காரன் கெட்ட வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பார்த்தாலும் அதற்குக் காரணம் சீனர்கள் நடந்துகொள்ளும் விதம் காரணமாக இருக்கலாமே ஒழிய, பிறிதொரு காரணம் இருப்பதாய்த் தெரியவில்லை. மேலும், இந்திய உணவைப் பார்க்கும்போது அவர்கள் அருவெறுப்படைவது பற்றி எழுதியிருந்தார். அதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து முற்றிலும் மறுக்கிறேன். எனக்கு உள்ளூர் நண்பர்கள் அதிகம். முதல் முறையாக இந்திய உணவை சுவைப்பதற்கு...

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொ ள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய " முடி " சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்:  “ முடி ” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது.  முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்க...

ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

அ ன்பு ஜெயமோகன்,  அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.   "ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு" ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.    அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக் கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள் , அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற...

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

படம்
சு ஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை. இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.   ...

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

படம்
ஒ ரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள். Look at that! Exactly. Brilliant. (முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)