பேரமைதி


கூடு நோக்கிப்
பறந்து சென்ற
பறவையொன்றின்
சிறகு ஒன்று
முறிந்து விட,
தடம்மாறி
ஒற்றைச் சிறகோடு
வெகுநேரம் போராடி
வலுக்குன்றி
பறவையது கீழே விழ,
காற்றில் அதன்
கால்தடங்களைத் தேடித்
திரிந்தலையும்
பறவைக்கூட்டங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை -
அது வீழ்ந்த இடம் ஒரு
முதலையின் வாய் என்றும்;
அவைகளுக்கு முறிந்த சிறகு
மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும்;
வீழ்ந்த மறுகணமே
விழுங்கிவிட்டு
சலனமின்றி
உறங்கிக் கிடக்கும்
முதலையின் அமைதி -
அந்த மகாசமுத்திரத்தின்
பேரமைதி!


கருத்துகள்

  1. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து என் படைப்புகளை வாசித்து ஊக்கமூட்டி வரும் நண்பர்கள் 'தளிர்' சுரேஷ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் இருவருக்கும் என் நன்றிச் செண்டு!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..