புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

மிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' சிறுகதையைத்தான் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

தமிழ் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன். He is truly an unparalleled genius. மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கிய 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டால், நமக்கும் மேலான சக்தி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் 'செல்லம்மாள்' கதையை எழுதியவர் நிச்சயம் அந்தக் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். 

புதுமைப்பித்தனே தான் எழுதிய 'காஞ்சனை' சிறுகதையில் தன்னை 'இரண்டாவது பிரம்மா' என்றும் 'நகல் பிரம்ம பரம்பரையின் கடைக்குட்டி' என்று அழைத்துக்கொள்கிறார். காஞ்சனை கதையை எழுதிய அதே வருடம் (1943) செல்லம்மாள் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுதியது பிரம்மனாக இல்லாத பட்சத்தில், அந்த இரண்டாவது பிரம்மா உருவாக்கிய 'காஞ்சனை' பிசாசுதான் ஒருவேளை 'செல்லம்மாள்' கதையை எழுதியிருக்க வேண்டும். 

'காதல் கதை' என்று சொன்னேன். தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் அல்ல அது. வாசித்துப் பாருங்கள். நான் அப்படிச் சொல்வது ஏன் என்பது உங்களுக்குப் புரிய வரும். இந்தக் கதையில் வரும் 'பிரமநாயகம் பிள்ளை' கதாப்பாத்திரத்தை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

குறும்படம் எடுக்க விரும்புபவர்கள் ஏன் இதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது?

குறிப்பு
புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பை செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். 


புத்தகம் கைவசம் இல்லாதவர்களுக்கு செல்லம்மாள் கதை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இணைப்பு : http://azhiyasudargal.blogspot.be/2009/07/blog-post_6534.html

நன்றி: நூல்வெளி - உங்கள் பக்கம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..