கடவுள்

உலகின் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் கடவுள் இல்லை. கடவுளைக் கண்டுபிடித்த மற்றும் அந்தக் கடவுள் இல்லவே இல்லை என்று மறுத்துக்கொண்டும் இருக்கின்ற - இந்த மனிதர்கள்தான். ஒருநாள் உலகமே கூடி கடவுளே இல்லை என்று முடிவு எடுத்து, அனைவருமே நாத்திகர்களாகி விட்டால், அதே நாளில் உலகத்தின் அத்தனை சிக்கல்களும் காணாமல் போய்விடப் போவதில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையோடு சுபிட்சமாய் வாழ்ந்துவிடவும் போவதில்லை. கடவுளுக்கு பதிலாக இன்னொரு கோட்பாடு உருவாகி இருக்கும். அதை சார்ந்தும், எதிர்த்தும், ஒன்றும் புரியாமல் இடையிலும் என்று மூன்று வகையாக உலகம் பிரிக்கப்படும். சார்ந்து இருப்பவர்களுக்குள்ளேயே ஒரு நூறு கூட்டங்கள் உருவாகும். ஆனால், ஒன்று முக்கியம். ஒருவர் கடவுள் நம்பிக்கையுடையவரா, மறுப்பாளரா என்பதை மட்டும் வைத்து , அவர் அறிவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. இரு புறங்களிலும் மிகச்சிறந்த அறிவாளிகளைச் சந்தித்திருப்பதால் எடுத்த முடிவு இது. இரு புறங்களிலும் மூடர்களை கண்டிருப்பதாலும்தான். கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்பது போன்ற பிதற்றல்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. Being a rational and Being an atheist are not one and the same. Of course, you can apply set theory!

(எண்ணத்தூறல்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..