ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும், சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப் படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா...
அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றிடன் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
பதிலளிநீக்குநன்றி.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களுடைய 'சொல்லேருழவர்களில் ஒருவனாக' இந்தச் சிரியோனையும் சேர்த்து என் வலைத்தளத்தைப் பற்றி எழுதி பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றிச்செண்டு!!! 'சொல்லேருழவர்' என்கிற அழகிய சொல்லை பயன்படுத்தியதற்கு இன்னுமொரு நன்றி!!
வாழிய நலம்!