ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும், சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப் படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா...
அருமை!
பதிலளிநீக்குசைக்கிள் சம்பவம் அப்படியே என் மனதை பிழிந்துவிட்டது.மனிதர்கள் யாவருக்கும் உணர்வுகள் ஒன்றே! மொழிகள் வேறானால் என்ன?
பதிலளிநீக்குதேன்குழல் புத்தகம் வாங்கும் விருப்பம் அதிகமாகிவிட்டது. முறுக்கைத் தேடி வந்து எழுத்தில் வீழ்ந்தவள் நான்.
உங்கள் முன்னுரை அருமை!
- See more at: http://solvanam.com/?p=37755#sthash.ot4h5xZi.dpuf
உண்மை, துளசி கோபால். உணர்வுகள் ஒன்றே!
நீக்குபுத்தகத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்!! மிகவும் நன்றி!!
வாழ்த்துக்கள்... முன்னுரை அருமை.
பதிலளிநீக்குமிகவும் நன்றி, பரிவை குமார். தாங்கள் நலமா?
நீக்கு