அங்கு மட்டும்


'எங்கும் கடவுளே!' 
என்று கூறும்
எந்த மதத்தவனும் 
வேற்று மத ஆலயத்துக்குச் 
செல்ல மறுப்பதன் மூலம் 
அங்கீகரிக்கிறான் -
அங்கு மட்டும் 
அவன் கடவுள் இல்லை 
என்பதை.


கருத்துகள்


 1. பிற மதத்தவர்க்கு அனுமதி இல்லை
  அனைத்து ஆலயங்களிலும்.
  அனைத்து ஆலயங்களுக்கும் செல்ல
  மறுக்கும் நாத்திகர் உண்டு!
  செல்லத் தேவையற்ற
  ஞானிகள் உண்டு!
  ஒவ்வோர் பக்குவ நிலைகளில் ஒவ்வொருவரும்!

  கோவிலில் பிறக்கலாம்
  ஆனால் இறக்க்கூடாது
  என்பது அமிர்தானந்தமயி
  அன்னை வாக்கு.

  பதிலளிநீக்கு
 2. ஆம். தன் கோவில் கருவறைக்குள் நுழைந்தவனும்...புரிந்துகொள்கிறான் அங்கும் அவர் இல்லை என்பதை...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)