இடுகைகள்

கணையாழியின் 34-ஆம் பக்கம்

படம்
வி டுமுறை கழிந்து பெல்ஜியம் வந்து சேர்ந்தவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்:  "கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது." சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.   ' Kanayazhi of Feb carries an article on your short story collection ' என்று எழுதியிருந்தவர் தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரலும், மூத்த கலை விமர்சகரும், எழுத்தாளருமான  திரு. வெ.சா  (வெங்கட் சாமிநாதன்).  திரு.வெ.சா அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்   கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று   கணையாழி  பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இ...

ten months ago, you wrote...

படம்
மே ற்படி பொருளுடன் 'Your Journal Awaits' என்று பென்சுவிலிருந்து (Penzu) கடந்த மாதம் 26-ஆம் தேதி வந்திருந்த மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். உடனே பென்சுக்கு சென்று என்னுடைய நாட்குறிப்பேட்டை சற்று நேரம் புரட்டிவிட்டு, மார்ச் மாதம் 26-ஆம் தேதி எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்தேன். 'பார்வை' என்று தலைப்பும் வைத்திருக்கிறேன்.  (பென்சு நாட்குறிப்பேட்டிலிருந்து..) இதை எழுதியதற்கு இரண்டு மாதங்கள் கழித்து, என் மனைவி, மகனுடன் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்றிருந்தபோது இந்தக் காட்சி நினைவுக்கு வந்ததால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து என்னைச் சுற்றி நடப்பதையெல்லாம் 'கேட்டுக்கொண்டிருந்தேன்' - வானவில் உட்பட. அன்று மாலை நாட்குறிப்பில் எதுவும் எழுதவில்லை. 'நிறங்கள்' கதையை எழுதி வல்லமைக்கு அனுப்பிவிட்டேன். அதுவும் ஒரு 26-ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது. நிறங்களிலிந்து சில வரிகள்: "காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்...

சின்ன விஷயங்களின் மனிதனுடன்..

படம்
' வ ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன்.  புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ' சின்ன விஷயங்களின் மனிதன் ' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்?  புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்: "யானையைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து." எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்! இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனை...

ஏற்புரையிலிருந்து..

படம்
அ ம்மாவின் தேன்குழல் புத்தக வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய ஏற்புரையில் இருந்து ஒரு பகுதி: இ து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஏற்புரை என்பதால், ஒரு கதை சொல்லி என்னுடைய ஏற்புரையைத் தொடங்க இருக்கிறேன்.  இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெரியவர் சாலையோரக் கடை ஒன்றின் சுவரை ஒட்டி இன்னொரு சுவரெழுப்பி, மேடை அமைத்து தேநீர்க்  கடை ஒன்றை நடத்தி வந்தார். அங்கு அன்றாடம் பல வாடிக்கையாளர்கள் தேநீர் பருக வருவார்கள். வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர்கள். அந்தத் தாத்தாவும் எப்போதும் வெள்ளை ஜிப்பா அணிந்து பார்ப்பதற்கு ஒரு இசுலாமியரைப் போலவே இருப்பார். உருது மொழியிலும் சரளமாகப் பேசுவார். அங்கு வரும் இசுலாமியப் பெரியவர்கள் சிலர், 'எல மாத்தி டீ போடு பாய்!' என்று கேட்பார்கள். சில சமயம் அதற்குச் சம்மதித்து புது இலையில் தேநீர் போட்டுக் கொடுப்பார். சில சமயம் 'இப்போதான் மாத்தினேன் பாய்' என்று கூறி மறுத்துவிடுவார். அந்தத் தாத்தாவுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் பேரன் ஒருவன் இருந்தான். அவன் மாலைவேளைகளில் பள்ளி விட்டவுடன...

அம்மாவின் தேன்குழல் - புத்தக முன்னுரை

படம்
'அம்மாவின் தேன்குழல்' புத்தக முன்னுரையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ள சொல்வனம் இதழுக்கு என் நன்றிச்செண்டு! நண்பர்கள், புத்தக முன்னுரையை இங்கே வாசிக்கலாம்.. http://solvanam.com/?p=37755 இணையம் வழியாக புத்தகம் வாங்க.. http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1832

அம்மாவின் தேன்குழல் சிறுகதைத் தொகுப்பு - அகநாழிகை வெளியீடு

படம்
இ துகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை ' அகநாழிகை பதிப்பகம் ' வெளியிட இருக்கிறது.  இந்த நற்செய்தியை நண்பர்களிடம்  பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். தொகுப்பிலுள்ள  பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை.  சில சிறுகதைகள்  சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை .  உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள்.  எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப்  வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் ...

அம்மாவின் தேன்குழல் - என் முதல் சிறுகதைத் தொகுப்பு