அந்நியன்

குழந்தைகள் எத்தனை வேகமாக வளர்கிறார்கள். முகநூல் ஒரு குளிர்பதனப் பெட்டியைப் போன்று தனக்குள் சேமித்து வைத்திருக்கும் நினைவுத்துண்டுகளை அவ்வப்போது அள்ளித் தருகிறது. அவற்றை மிகக் கவனமாகக் கைகளில் ஏந்தி, உருக வைத்து துளியும் சிந்தாமல் பருகுகிறேன். மகனுக்கு அப்போதெல்லாம் மிகவும் பிடித்தமான தண்ணீர் விளையாட்டுக்குக்கூட என் உதவி தேவைப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சத்யஜித் ரேயின் "ஆகந்துக்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, " என்னப்பா, படம் முழுவதும் உன் புராணமாக இருக்கிறது?" என்று சிரித்துக்கொண்டே என் சிந்தனைகளை விமர்சிக்கிறான். "வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது" என்கிற ஒரு வரியைக் கண்டடைந்ததாக ஜெயமோகன் எழுதியிருந்தார். அதே வாழ்க்கை என்பது “நம் குழந்தைகளுக்கு அந்நியர்களாக ஆகிக்கொண்டே இருப்பதுவும்தான்” என்கிற வரியை நான் நேற்று கண்டடைந்தேன். அவனோடு சேர்ந்து சிரித்துக்கொண்டே, "ஆம். நான் உனக்கு ஒரு ஆகந்துக்" என்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..