ஏ ழாவது சொர்க்கத்தின் எல்லையில் "ஸித்ரத்துல் முன்தஹா" என்கிற "ஷஜாரா" இருக்கிறதாம். ஸித்ரத்துல் முன்தஹா என்றால் எல்லையின் முடிவில் இருக்கும் இலந்தை மரம். ஷஜாரா என்றால் பெருவிருட்சம். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் சூழ அமைந்த அந்த பெருவிருட்சத்தின் வேர், ஆறாம் சொர்க்கம் வரை நீள்கிறதாம். வேர்ப் பகுதியிலிருந்து ஸல்ஸபீல், கவ்ஸர், நைல், யூப்ரடீஸ் ஆகிய நான்கு பெருநதிகள் உற்பத்தியாகின்றதாம். விருட்சத்தின் இலைகள் யானைகளின் காதுகளை ஒத்ததாகவும், அதன் இலந்தைப் பழங்கள் பெரிய கூஜாக்கள் போலவும் இருக்குமாம். மரத்தைச் சுற்றிலும் எப்போதும் தங்கத்தினாலான வெட்டுக்கிளிகள் பறந்துகொண்டே இருக்குமாம். ஸித்ரத்துல் முந்தஹாவைத் தாண்டி யாருமே செல்ல முடியாதாம். பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் உயிரினங்கள், அவற்றின் செயல்களைப் பற்றிய குறிப்புகள் யாவும் இறுதியில் இந்த விருட்சத்தைத்தான் சென்றடைகின்றன. அதே போல மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் இறைக்கட்டளைகளும் இங்குதான் வந்தடைகின்றன. இவை இரண்டுமே வானவர்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்று ஒரு ஹதீஸ் சொல்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான செய்...
த மிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் ' செல்லம்மாள் ' சிறுகதையைத்தான் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன். He is truly an unparalleled genius. மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கிய 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டால், நமக்கும் மேலான சக்தி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் 'செல்லம்மாள்' கதையை எழுதியவர் நிச்சயம் அந்தக் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். புதுமைப்பித்தனே தான் எழுதிய 'காஞ்சனை' சிறுகதையில் தன்னை 'இரண்டாவது பிரம்மா' என்றும் 'நகல் பிரம்ம பரம்பரையின் கடைக்குட்டி' என்று அழைத்துக்கொள்கிறார். காஞ்சனை கதையை எழுதிய அதே வருடம் (1943) செல்லம்மாள் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுதியது பிரம்மனாக இல்லாத பட்சத்தில், அந்த இரண்டாவது பிரம்மா உருவாக்கிய 'காஞ்சனை' பிசாசுதான் ஒருவேளை 'செல்லம்மாள்' கதையை எழுதியிருக்க வேண்டும்...
ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும், சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப் படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா...
அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு