வன்முறை

என்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன -
தாவரங்கள்!
எனக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
எனக்குக் கவலையில்லை!

உன்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன -
கால்நடைகள்!
உனக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
உனக்குக் கவலையில்லை!

அவனுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் -
நீயும் நானும்!
அவனுக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
அவனுக்குக் கவலையில்லை!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்