அம்மாவின் (கொரோனா) காமெடிகள் (4)

"ஹலோ.."
"சொல்லு மா.. நாட்ல என்ன நடக்குது"
"நீ ஒரு மாசத்துக்கு முன்ன சொன்னதெல்லாம் நடக்குது பா. ஒன்னுமே புரியல. கோவிலுக்குக்கூட போக முடியல. கோவில், மசூதி, சர்ச் எல்லாத்தையும் மூடிட்டானுங்க" 
"நல்லதுதானே மா"
"உனக்குத்தான் சாமி தேவையில்லை. எங்களுக்கு வேணுமே பா. கஷ்ட காலத்துலயே கோவிலை மூடினா எப்படி?" 
"தேகோ தேவாலயா ப்ரோக்தா." 
"எனக்கு டச்சு தெரியாதே பா"
"மாம்ஸ். வீட்டுக்குள்ளேயே ஒரு இந்துத்துவர வெச்சிக்கிட்டு சமஸ்க்ருதத்தை டச்சுனு சொல்றியே வெட்கமா இல்ல?" 
"எனக்கு தமிழ் போதுண்டா கண்ணா. ஆமா அப்படீன்னா என்ன?"
"தேகமே தேவாலயம். அத விட்டுட்டு வெளிய கோவில்லயும், சாமியாருங்க கிட்டயும் கடவுள தேடினா, தேடிட்டே இருக்கவேண்டியதுதான். ஆயிரம் கோவிலுக்குப் போனாலும், ஆயிரம் சாமியார்களை பார்த்தாலும், தன் மேல நம்பிக்கை வைக்காதவன்தான் பெரிய நாத்திகன்."
"அடேயப்பா அட்டகாசமா இருக்கே. அப்ப உனக்கு திரும்பவும் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?"
"ஏம்மா, தேகமே தேவாலயம்னா அதுக்கு உள்ள உட்கார்ந்துட்டு இருக்கற நான் யாரு."
"நீ கடவுள்." 
"எக்ஸ்சாக்ட்லி. அஹம் ப்ரம்மாஸ்மி. எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கிறது."



எல்லா மதத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும் ஒரு வேண்டுகோள். என்னைப் போன்ற உலகாயத சார்வாகர்களை நீங்கள் என்றுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இருந்தாலும் சொல்வது எம் கடமை. உங்கள் நம்பிக்கைகளை குலைக்கும் நேரம் இதுவல்ல என்பதையும் நன்கு அறிவேன். இருந்தாலும், இன்னும் சில வாரங்களுக்கு உங்களின் தேகமே தேவாலயமாக இருக்கட்டும். எங்கும் வியாபித்திருக்கும் சர்வ வல்லமை பெற்ற உங்கள் கடவுள் உடலுக்குள், குறைந்தபட்சம் வீட்டுக்குள்ளாவது இருக்க மாட்டாரா? அல்லது அவருடைய வல்லமையின் மீதே உங்களுக்கு சந்தேகமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..