கோகுல் எனும் சினிமா கூகுள்


முகநூலில் ஒரு சிலரை அவர்களுக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து வருகிறேன். அதில் ஒருவர் தமிழினி மின்னிதழின் ஆசிரியர் கோகுல் பிரசாத். வழக்கமான விருப்பச் சொடுக்குகளைத் தாண்டிய உறவு அது. அவர் வெளியிட்டிருக்கும் "உலகின் சிறந்த திரைப்படங்கள்" மற்றும் "உலகின் சிறந்த இயக்குநர்கள்" பட்டியல்களைப் பார்த்தேன். பிரமிப்பாக இருக்கிறது. இது ஒரு மகத்தான முயற்சி. அவர் ஒரு சினிமா காதலர் என்பதை அறிவேன். ஆனால் அவர் வாழ்வில் சினிமா மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்கனவே ஒருமுறை அவரிடமிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைப் பகிர்ந்ததன் மூலம் அறிந்துகொண்டேன். எனக்கெல்லாம் பட்டியல் போடுவதற்குப் பொறுமையே இருக்காது. அவருடைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் ஒரு அகவயமான மனிதர் என்று அனுமானித்து வைத்திருக்கிறேன். அகவயமானவர்கள் பொறுமைசாலிகள். ஆழமானவர்களும்கூட. 
பட்டியல்கள் அவசியமா? புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். நான் வழக்கமாக பிறர் பரிந்துரைப்பதன் பேரில் எந்த ஒரு புத்தகத்தை வாங்கி வாசிப்பவன் இல்லை. அதே சமயம் உலகின் தலைசிறந்த படைப்பாளிகள் பலரை விமர்சகர்களின் பட்டியல்கள் மூலமாகவும், எனக்குப் பிடித்த படைப்பாளிகள் எழுதிய படைப்பாளிகளின் உலகம் சார்ந்த புத்தகங்கள் மூலமாகவுமே அறிந்துகொண்டேன். ஆனால் அவர்களின் தர வரிசை என்னுடைய ரசனையை ஒத்துப் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பட்டியலிட்டிருக்கும் படைப்பாளிகளின் வேறு சில படைப்புகள், அவர்கள் குறிப்பிட்டுள்ள படைப்புகளை விடவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஏன் அவர்களுடைய பட்டியலில் இல்லை என்று யோசித்தால், அது அவர்களுடைய பட்டியல். நமக்கான பட்டியலை நாம்தான் போட்டுக்கொள்ள வேண்டும். 
உதாரணத்துக்குச் சொல்லப் போனால், லா.ச.ரா-வை நினைத்தாலே என் கண் முன்னே உடனே தோன்றுவது அந்தச் சிறுவன் கண்ணன்தான். விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்ட கதைகளான 'பாற்கடல்', 'ஜனனி', பச்சைக்கனவு' போன்ற சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும், என்னை மிகவும் பாதித்த சிறுகதை என்றால் அவருடைய "கண்ணன்" சிறுகதைதான். ஆனால், இதுவரை அந்தச் சிறுகதையைப் பற்றி யாரும் விமர்சித்தோ / குறிப்பிட்டு எழுதியோ நான் வாசித்ததில்லை. அவ்வளவு ஏன் அவருடைய மகன் சப்தரிஷி தொகுத்து வெளியிட்ட தேர்ந்தெடுத்த சிறுகதைகள் புத்தகத்திலேயே அந்தச் சிறுகதை இல்லை. அதே போலவே திலீப்குமாரின் "ஒரு குமாஸ்தாவின் கதை". இந்தக் கதையைப் பற்றி கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். "நீ மட்டும்தான் இந்தக் கதையைப் பற்றி சிலாகித்துப் பேசி வருகிறாய்" என்று திலீப்குமாரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். இப்போது "நசீர்" திரைப்படம் வந்த பிறகு, அது பரவலாகப் பேசப்படுகிறது. திலீப்குமாரைப் பற்றிக்கூட விமர்சகர்களின் பட்டியல் மூலமாகவே அறிந்துகொண்டேன். 
எனவே, என்னளவில் இத்தகைய பட்டியல்கள் நாமறியாத படைப்பாளிகளை அறிந்துகொள்வதற்கான நல்லதொரு துவக்கம் மட்டுமே. அவற்றின் தரவரிசையைப் பற்றி அதிகமாக சிந்திக்காமல், பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் படைப்புகளையும் தாண்டி பிற படைப்புகளைச் சென்றடைந்து நமக்கான சிறந்த பட்டியலை நாமே போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. இது ஒரு முற்றுப் பெறாத தொடர் இயக்கம். ஆனால் கோகுல் மிரட்டுகிறார். காணாதது கடலளவு. அவர் கொடுத்திருக்கும் பட்டியலைத் தாண்டிச் செல்வது கடினம்தான். இதில் சில படைப்பாளிகளின் சிறந்த படங்களாக நான் கருதும் படைப்புகள் விடுபட்டிருக்கின்றன. ஆனால் இது அவருடைய தேர்வு. நான் ஏற்கனவே சொன்னது போல் அது ரசனை சார்ந்த விஷயம். மேலும் அவரளவுக்கு சினிமா ஞானமும், விமர்சிக்கும் தகுதியும் எனக்கு இல்லை. எப்படி இருப்பினும் அவர் கொடுத்திருக்கும் பட்டியலுக்குப் பின்னால் இருக்கும் அவரது தேடலும் பொறுமையும் அர்ப்பணிப்பும் உழைப்பும் பிரமிப்பூட்டுகிறது; பாராட்டப்பட வேண்டியது; சினிமா ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது. 
இந்தப் பதிவுக்காக கோகுல் என்று தட்டச்சு செய்யும் போது, "கூகுள்" என்று வந்தது தற்செயலா என்று தெரியவில்லை. இருந்தாலும், கூகுளிடம் ஒரு கேள்வி: "எப்போது உங்கள் திரைப்படத்தை எடுக்கப் போகிறீர்கள், கோகுல்? இயக்க முடிவு செய்தால் என்னை மறந்து விடாதீர்கள். இப்போதே வாய்ப்பு கேட்டு விடுகிறேன்." 


இனி கோகுலின் பட்டியல்கள் / பரிந்துரைகள்: 

* * * BEST CHILDREN'S MOVIES * * * 

1. Ratatouille (2007)
2. Toy Story 1,2,3,4 (1995-2019)
3. The Red Balloon (1956)
4. Wall-E (2008)
5. E.T. The Extra Terrestrial (1982)
6. The Incredibles (2004)
7. Fantastic Mr. Fox (2009)
8. Jurassic Park (1993)
9. The Lego Movie (2014)
10. Spirited Away (2001)
11. Up (2009)
12. Inside Out (2015)
13. My Neighbour Totoro (1988)
14. Coco (2017)
15. Moana (2016)
16. Howl’s Moving Castle (2004)
17. Nausicaa of the Valley of the Wind (1984)
18. The Wind Rises (2013)
19. Miracle on 34th Street (1947)
20. The Wizard of Oz (1939)
21. The Lion King (1994)
22. Finding Nemo (2003)
23. Paddington 1,2 (2014-2017)
24. Shaun the Sheep, the Movie (2015)
25. Wallace and Gromit: The Curse of the Were-Rabbit (2005)
26. Chicken Run (2000)
27. It’s a Wonderful Life (1946)
28. The Jungle Book (2016)
29. Hugo (2011)
30. Big Hero 6 (2014)
31. Shrek (2001)
32. The Red Turtle (2016)
33. Beauty and the Beast (1991)
34. Song of the Sea (2014)
35. Children of Heaven (1997)
36. The White Balloon (1995)
37. Where is the Friend’s Home? (1987)
38. School of Rock (2003)
39. Kubo and the Two Strings (2016)
40. Life of Pi (2012)
41. King Kong (2005)
42. Miracle in Milan (1951)
43. Jojo Rabbit (2019)
44. Wadjda (2012)
45. Mary Poppins (1964)
46. Fantasia (1940)
47. Planet Earth I, II (2006-2016)
48. The Blue Planet I, II (2001-2017)
49. Frozen Planet (2011)
50. The Runner (1985)
51. Chasing Coral (2017)
52. Kiki’s Delivery Service (1989)
53. The Blue Umbrella (2005)
54. Goopy Gyne Bagha Byne (1969)
55. Budhia Singh, Born to Run (2016)
56. Taare Zameen Par (2007)

* * * BEST MOVIES OF ALL TIME * * * 

1. Andrei Rublev - Andrei Tarkovsky (1966, Russia)
2. Human Condition Trilogy - Masaki Kobayashi (1959-61, Japan)
3. Satantango - Bela Tarr (1994, Hungary)
4. Nazarin - Luis Bunuel (1959, Spain)
5. Shoah - Claude Lanzmann (1985, France)
6. The Fifth Seal - Zoltan Fabri (1976, Hungary)
7. The Roof - Vittorio De Sica (1956, Italy)
8. The Passion of Joan of Arc - Carl Theodor Dryer (1928, Denmark)
9. Berlin Alexanderplatz - Rainer Werner Fassbinder (1980, Germany)
10. The White Ribbon - Michael Haneke (2009, Germany)
11. Melancholia - Lav Diaz (2008, Philippines)
12. Germany Pale Mother - Helma Sanders- Brahms (1981. Germany)
13. The Emigrants & The New Land - Jan Troell (1972, Sweden)
14. Mandala - Im Kwon-taek (1981, South Korea)
15. Au Hazard Balthazar - Robert Bresson (1966, France)
16. Out 1 - Jacques Rivette (1971, France)
17. Trilogy of Borders - Theo Angelopoulos (1991-98, Greece)
18. The Turin Horse - Bela Tarr (2011, Hungary)
19. Jeanne Dielman, 23 Commerce Quay, 1080 Brussels - Chantal Akerman (1975, Belgium)
20. Umberto D. - Vittorio De Sica (1952, Italy)
21. Lucia - Humberto Solas (1968, Cuba)
22. Dead Souls - Wang Bing (2018, China)
23. Heimat - Edgar Reitz (1984, Germany)
24. Boyhood - Richard Linklater (2014, USA)
25. Winter Sleep - Nuri Bilge Ceylan (2014, Turkey)
26. Amour - Michael Haneke (2012, Germany)
27. The Tree of Life - Terrence Malick (2011, USA)
28. The Leopard - Luchino Visconti (1963, Italy)
29. Leviathan - Andrey Zvyagintsev (2014, Russia)
30. Bicycle Thieves - Vittorio De Sica (1948, Italy)
31. A City of Sadness - Hou Hsiao-hsien (1989, Taiwan)
32. Samurai Rebellion - Masaki Kobayashi (1967, Japan)
33. A Man Escaped - Robert Bresson (1956, France)
34. Evolution of a Filipino Family - Lav Diaz (2004, Philippines)
35. The Boys of Paul Street - Zoltan Fabri (1969, Hungary)
36. La Belle Noiseuse - Jacques Rivette (1991, France)
37. Ordet - Carl Theodor Dreyer (1955, Denmark)
38. Ikiru - Akira Kurosawa (1952, Japan)
39. Raise the Red Lantern - Zhang Yimou (1991, China)
40. Salvatore Giuliano - Francesco Rosi (1962, Italy)
41. Cemetery of Splendour - Apichatpong Weerasethakul (2015, Thai)
42. Shadows of Forgotten Ancestors - Sergei Parajanov (1965, Russia)
43. Sunrise, A Song of Two Humans - F.W.Murnau (1927, Germany)
44. Mysteries of Lisbon - Raul Ruiz (2010, Portugal)
45. Loveless - Andrey Zvyagintsev (2017, Russia)
46. Pickpocket - Robert Bresson (1959, France)
47. No Mercy No Future - Helma Sanders-Brahms (1981, Germany)
48. Wild Strawberries - Ingmar Bergman (1957, Sweden)
49. The Silence of the Sea - Jean-pierre Melville (1949, France)
50. Ugetsu Monogatari - Kenji Mizoguchi (1953, Japan)
51. Still Walking - Hirokazu Kore-eda (2008, Japan)
52. Arabian Nights Trilogy - Miguel Gomes (2015, Portugal)
53. Los Olvidados - Luis Bunuel (1950, Spain)
54. Still Life - Jia Zhangke (2006, China)
55. Harakiri - Masaki Kobayashi (1962, Japan)
56. Rashomon - Akira Kurosawa (1950, Japan)
57. The Child - Dardenne brothers (2005, Belgium)
58. The Ballad of Narayama - Shohei Imamura (1983, Japan)
59. Here Is Your Life - Jan Troell (1966, Sweden)
60. Uncle Boonmee Who Can Recall His Past Lives - Apichatpong Weerasethakul (2010, Thai)
61. An Elephant Sitting Still - Hu Bo (2018, China)
62. The Tree of Wooden Clogs - Ermanno Olmi (1978, Italy)
63. The Blue Angel - Josef von Sternberg (1930, Germany)
64. Hero - Zhang Yimou (2002, China)
65. The Life of Oharu - Kenji Mizoguchi (1952, Japan)
66. Bob the Gambler - Jean-pierre Melville (1956, France)
67. The Bitter Tears of Petra von Kant - Rainer Werner Fassbinder (1972, Germany)
68. Two Days, One Night - Dardenne brothers (2014, Belgium)
69. Christ Stopped at Eboli - Francesco Rosi (1979, Italy)
70. Shoah, Four Sisters - Claude Lanzmann (2017, France)
71. The Round-Up - Miklós Jancsó (1966, Hungary)
72. 4 Months, 3 Weeks and 2 Days - Cristian Mungiu (2007, Romania)
73. House of Flying Daggers - Zhang Yimou (2004, China)
74. Hungarians - Zoltan Fabri (1978, Hungary)
75. Songs from the Second Floor - Roy Andersson (2000, Sweden)
76. Marketa Lazarová - František Vláčil (1967, Czech)
77. The Seventh Seal - Ingmar Bergman (1957, Sweden)
78. Long Day's Journey into Night - Bi Gan (2018, China)
79. Playtime - Jacques Tati (1967, France)
80. The Wild Pear Tree - Nuri Bilge Ceylan (2018, Turkey)
81. Man Is Not a Bird - Dušan Makavejev (1965, Yugoslavia)
82. The Discreet Charm of the Bourgeoisie, The Phantom of Liberty, That Obscure object of Desire - Luis Bunuel (1972 - 77, Spain)
83. The Look of Silence - Joshua Oppenheimer (2014, Denmark)
84. Manchester by the Sea - Kenneth Lonergan (2016, USA)
85. The Grapes of Wrath - John Ford (1940, USA)
86. Diary for My Children - Márta Mészáros (1984, Hungary)
87. White Material - Claire Denis (2009, France)
88. Gett the Trial of Viviane Amsalem - Ronit Elkabetz & Shlomi Elkabetz (2015, Israel)
89. The Rules of the Game - Jean Renoir (1939, France)
90. 8 1/2 - Federico Fellini (1963, Italy)
91. Ossos, In Vanda's Room, Colossal Youth (Lisbon Trilogy) - Pedro Costa (1997 - 2006, Portugal)
92. East Of Eden - Elia Kazan (1955, USA)
93. A Brighter Summer Day - Edward Yang (1991, Taiwan)
94. Portrait of a Lady on Fire - Céline Sciamma (2019, France)
95. Werckmeister Harmonies - Béla Tarr (2000, Hungary)
96. Stray Dogs - Tsai Ming-liang (2013, Taiwan)
97. Persepolis - Marjane Satrapi & Vincent Paronnaud (2007, France)
98. A Prophet - Jacques Audiard (2009, France)
99. Proletariat Trilogy - Aki Kaurismaki (1986 - 1990, Finland)
100. Nostalgia for the Light - Patricio Guzmán (2010, Chile)
101. The Best of Youth - Marco Tullio Giordana (2003, Italy)
102. The Fog of War - Errol Morris (2003, USA)
103. The Gatekeepers - Dror Moreh (2012, Israel)
104. The Constant Factor - Krzysztof Zanussi (1980, Poland)
105. Underground - Emir Kusturica (1995, Yugoslavia)
106. The General - Buster Keaton (1926, USA)
107. Electra, My Love - Miklós Jancsó (1974, Hungary)
108. The Death of Mr. Lazarescu - Cristi Puiu (2005, Romania)
109. The Burmese Harp - Kon Ichikawa (1956, Japan)
110. W.R.: Mysteries of the Organism - Dušan Makavejev (1971, Yugoslavia)
111. The Overnighters - Jesse Moss (2014, USA)
112. Young Torless - Volker Schlöndorff (1966, Germany)
113. Meghe Dhaka Tara - Ritwik Ghatak (1960, India)
114. Elena - Andrey Zvyagintsev (2011, Russia)
115. Poetry - Lee Chang-dong (2010, South Korea)
116. Twenty Hours - Zoltán Fábri (1965, Hungary)
117. Das Boot - Wolfgang Petersen (1981, Germany)
118. The Lobster - Yorgos Lanthimos (2015, Greece)
119. There Will be Blood - Paul Thomas Anderson (2007, USA)
120. Hard to Be a God - Aleksei Yuryevich German (2013, Russia)
121. Dosar - Rituparno Ghosh (2006, India)
122. Greed - Erich Von Stroheim (1924, USA)
123. Modern Times - Charlie Chaplin (1936, USA)
124. Maidan - Sergei Loznitsa (2014, Ukraine)

* * * BEST COMMERCIAL MOVIES OF ALL TIME * * * 

1. Arsenic and Old Lace (1944)
2. His Girl Friday (1940)
3. Out of the Past (1947)
4. Gaslight (1944)
5. Red River (1948)
6. The Big Sleep (1946)
7. Wuthering Heights (1939)
8. The Thin Man (1934)
9. The Philadelphia Story (1940)
10. Ashes and Diamonds (1958)
11. Ben-Hur (1959)
12. Roman Holiday (1953)
13. The Horse's Mouth (1958)
14. The Ten Commandments (1956)
15. The Third Man (1949)
16. The Wages of Fear (1953)
17. Anatomy of a Murder (1959)
18. Eyes Without a Face (1960)
19. Kiss Me Deadly (1955)
20. Letter Never Sent (1960)
21. Rebel Without a Cause (1955)
22. The Magnificent Seven (1960, 2016)
23. Witness to Murder (1954)
24. High Noon (1952)
25. Rear Window (1954)
26. North by Northwest (1959)
27. How the West was Won (1962)
28. To Have and Have not (1944)
29. The Treasure of the Sierra Madre (1948)
30. Rio Bravo (1959)
31. The League of Gentlemen (1960)
32. All that Jazz (1979)
33. Blade Runner (1982)
34. Cinema Paradiso (1988)
35. Hamlet (1964)
36. Investigation of a Citizen Above Suspicion (1970)
37. Kramer Vs. Kramer (1979)
38. Mad Max Fury Road (2015)
39. Mafioso (1968)
40. Monty Python's Life of Brian (1979)
41. Monty Python and the Holy Grail (1975)
42. Serpico (1973)
43. Dog Day Afternoon (1975)
44. The Great Escape (1963)
45. Slacker (1991)
46. Dazed and Confused (1993)
47. The Spy Who Came in From the Cold (1965)
48. And Justice for All (1979)
49. Duel (1971)
50. If (1968)
51. Il Sorpasso (1962)
52. The Conformist (1970)
53. Thelma and Louise (1991)
54. In Cold Blood (1967)
55. The Servant (1963)
56. Gladiator (2000)
57. Cinderella Man (2005)
58. The Insider (1999)
59. L.A. Confidential (1997)
60. Schindler's List (1993)
61. Munich (2005)
62. Bridge of Spies (2015)
63. Papillon (1973)
64. Missing (1982)
65. Django Unchained (2012)
66. Stranger Than Paradise (1984)
67. Skyfall (2012)
68. You Don't Know Jack (2010)
69. Runaway Jury (2003)
70. Heavenly Creatures (1994)
71. Get Carter (1971)
72. The Italian Job (1969)
73. The Prestige (2006)
74. The Dark Knight (2008)
75. Spotlight (2015)
76. Warriors of the Rainbow (2011)
77. Purple Noon (1960)
78. Joint Security Area (2000)
79. Memories of Murder (2003)
80. Ford Vs. Ferrari (2019)
81. Black Friday (2004)
82. Satya (1998)
83. The Lunchbox (2013)
84. Yavanika (1982)
85. Bernie (2011)
86. Contagion (2011)
87. Downfall (2004)
88. Flight (2012)
89. Into the Wild (2007)
90. Seven (1995)
91. The Green Mile (1999)
92. This is England (2006)
93. American Gangster (2007)
94. The Grand Budapest Hotel (2014)
95. Moneyball (2011)
96. Ratatouille (2007)
97. Run Lola Run (1998)
98. Sideways (1994)
99. The Perks of Being a Wallflower (2012)
100. We Need to Talk About Kevin (2011)
101. You Were Never Really Here (2017)
102. The Man Who Shot Liberty Valance (1962)
103. Rififi (1955)
104. The Ghost Writer (2010)
105. Chinatown (1974)
106. Suspiria (1977, 2018)
107. John Wick (2014, 2017, 2019)
108. Midnight Cowboy (1969)
109. Billy Liar (1963)
110. Scent of a Woman (1992)
111. The English Patient (1996)
112. The Reader (2008)
113. The French Connection (1971)
114. Don't Think Twice (2016)
115. The Handmaiden (2016)
116. Good Time (2017)
117. A Ghost Story (2017)
118. The Walk (2015)
119. Rush (2013)
120. The Normal Heart (2014)
121. Moonrise Kingdom (2012)
122. Rosemary's Baby (1968)
123. Clerks (1994)
124. Shock Corridor (1963)
125. This Is Spinal Tap (1984)
126. Two-Lane Blacktop (1971)
127. Gangs of Wasseypur (2012)
128. The Pianist (2002)
129. The Lord of the Rings Trilogy (2001-03)
130. The Shining (1980)
131. Whiplash (2014)

* * * BEST DIRECTORS OF ALL TIME * * * 

1. Vittorio De Sica (Italy)
2. Bela Tarr (Hungary)
3. Masaki Kobayashi (Japan)
4. Luis Bunuel (Spain)
5. Zoltan Fabri (Hungary)
6. Kenji Mizoguchi (Japan)
7. Akira Kurusowa (Japan)
8. Federico Fellini (Italy)
9. Carl Theodor Dryer (Denmark)
10. Rainer Werner Fassbinder (Germany)
11. Michael Haneke (Germany)
12. Im Kwon-taek (South Korea)
13. Robert Bresson (France)
14. Jacques Rivette (France)
15. Andrei Tarkovsky (Russia)
16. F W Murnau (Germany)
17. Helma Sanders-Brahms (Germany)
18. Ingmar Bergman (Sweden)
19. Theo Angelopoulos (Greece)
20. Hou Hsiao-hsien (Taiwan)
21. Jia Zhangke (China)
22. Lav Diaz (Philippines)
23. Dardenne Brothers (Belgium)
24. Francesco Rosi (Italy)
25. Edgar Reitz (Germany)
26. Luchino Visconti (Italy)
27. Josef Von Sternberg (Austria)
28. Istvan Szabo (Hungary)
29. Aki Kaurismaki (Finland)
30. Nuri Bilge Ceylan (Turkey)
31. Humberto Solas (Cuba)
32. Krzysztof Zanussi (Poland)
33. Zhang Yimou (China)
34. Andrei Zvyaginstev (Russia)
35. Jan Troell (Sweden)
36. Shohei Imamura (Japan)
37. Jean Pierre Melville (France)
38. Raul Ruiz (Chile)
39. Elia Kazan (Greece-USA)
40. Chantal Akerman (Belgium)
41. Apichatpong Weerasethakul (Thai)
42. Sergei Parajanov (Russia)
43. Hirokazu Kore-eda (Japan)
44. Roy Andersson (Sweden)
45. Leni Riefenstahl (Germany)
46. Richard Linklater (USA)
47. Kon Ichikawa (Japan)
48. Miklos Jancso (Hungary)
49. Frantisek Vlacil (Czech)
50. Lars Von Trier (Denmark)
51. Alexander Sokurov (Russia)
52. Pedro Costa (Portugal)
53. John Ford (USA)
54. Claude Lanzmann (France)
55. Erich Von Stroheim (Austria)
56. Werner Herzog (Germany)
57. Tsai Ming-liang (Taiwan)
58. Ermanno Olmi (Italy)
59. Terrence Malick (USA)
60. Dusan Makavejev (Serbia)
61. Celine Sciamma (France)
62. Jacques Tati (France)
63. Bi Gan (China)
64. Volker Schlondorff (Germany)
65. Claire Denis (France)
66. Christian Petzold (Germany)
67. Pawel Pawlikowski (Poland)
68. Hong Sang-soo (South Korea)
69. Marta Meszaros (Hungary)
70. Miguel Gomes (Portugal)
71. Jean Cocteau (France)
72. Michelangelo Antonioni (Italy)
73. Yasujiro Ozu (Japan)
74. Denis Villeneuve (France-Canada)
75. Cristian Mungui (Romania)
76. Paul Thomas Anderson (USA)
77. Joshua Oppenheimer (Denmark)
78. Wong Kar-wai (Hong Kong)
79. Wim Wenders (Germany)
80. Rituparno Ghosh (India)
81. Victor Erice (Spain)
82. Jean-Marie Straub & Daniele Huilet (France)
83. Ken Loach (Britain)
84. Emir Kusturica (Serbia)
84. Ritwik Ghatak (India)
85. Edward Yang (Taiwan)
86. Hu Bo (China)
87. Asghar Farhadi (Iran)


நன்றியும் பாராட்டுகளும் அன்பும், கோகுல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..