வேறு வழியில்லை

என்னைப் பற்றிய உண்மைகளை விடவும் 
என்னைப் பற்றிய பொய்கள்
என்னைச் சார்ந்தவர்களுக்கு 
மிகவும் பிடிக்கிறது
ஏனெனில்
என்னைப் பற்றிய பொய்கள் 
அவர்களது அநுமானங்களுக்கு
ஒத்துப் போவதாக இருக்கின்றன
என்னைப் பற்றிய பொய்கள்
அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கின்றன
என்னைப் பற்றிய பொய்கள்
அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன
இப்படி எதுவாக இல்லாவிட்டாலும்
என்னைப் பற்றிய பொய்கள்
வளைக்கக் கூடியதாக இருக்கின்றன
தங்களுக்கு வேண்டியது போல்
வளைத்துக் கொள்ள முடிகிறது
அப்படி வளைக்கும் முயற்சியில்
என்னைப் பற்றிய உண்மைகளின் அழகை
சிறிது சிதைக்கவும்
தயங்குவதில்லை அவர்கள்
என்னைப் பற்றிய உண்மைகளை
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்
நிராகரிக்கிறார்கள்
வெறுக்கிறார்கள்
சிதைக்கிறார்கள்
முடிவில் விலகி ஓடிச் சென்று விடுகிறார்கள்
ஒரு கட்டத்தில்
என்னைப் பற்றிய பொய்களே
என்னைப் பற்றிய உண்மைகளாகவும் ஆகிவிடுகின்றன
தனிமரமாய் இந்த வேடிக்கைகளை
அவை தரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு
நின்று புன்னகைப்பதைத் தவிர,
வேறு வழியில்லை
என்னைப் பற்றிய உண்மைகளுக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..