இடுகைகள்

பொறாமை எனும் நஞ்சு..

படம்
க டந்த வாரம் நான் எழுதிப் பதிவிட்டிருந்த " புறங்கூறாமை எனும் அறம் " பதிவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வழியாகவும் பல நண்பர்கள் பாராட்டிச் செய்தி அனுப்பி இருந்தார்கள். ஒரு சிலருக்கு உடனே பதிலனுப்பிவிட்டேன். ஆனால், தொடர்புகொண்ட அனைவருக்குமே உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் எடுத்து பதில் அளிக்க விழைவதும் ஒரு காரணம்.  ஒரு சிலர், "சுய மேன்மை" (personal excellence) சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதுதான் சிறந்தக் கட்டுரை என்றார்கள். உண்மையிலேயே மனநிறைவு அளிக்கும் சொற்கள் இவை. நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவாயினும், அதை ஒரு வசைக் கட்டுரையாகவும் பலர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால் அதற்கு மாறாக, வந்துகொண்டிருக்கும் எதிர்வினைக ள் எனக்கு உவகையளிப்பதாகவே உள்ளது;  மனதில் நம்பிக்கைப் பிறக்கிறது; புத்தொளி பாய்ச்சுகிறது. என்னையும், என்னுடைய செயல்களையும் தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவங்...

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..

படம்
நா ட்குறிப்பு எழுதுவது எளிது. அது நாமே நமக்காக எழுதிக்கொள்வது. என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக எழுதுவதற்குத் தனித்திறமை வேண்டும். குறிப்பாக குழந்தை எழுத்தாளர்களை நான் வியப்புடன் பார்க்கிறேன். குழந்தைகளுக்கு எழுதுவதென்பது ஒரு சவாலான விஷயம்; அத்தனை எளிதானதில்லை. உதாரணத்துக்கு, மாணவர்களுக்கான தினமலர் பட்டம் இதழுக்காக "வானவில்" பற்றி நான் எழுதிய எளியதொரு அறிவியல் துணுக்கை எடுத்துக்கொள்வோம். அது மொத்தம் மூன்று வழிகளில் எழுதப்பட்டது. இறுதியாக, மூன்றாவது வடிவமே இதழில் பிரசுரிக்கப்பட்டது. பட்டம் இதழின் உதவி ஆசிரியர் பொன். வாசுதேவன் அவர்களுக்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும். ஒரு இதழில் ஆசிரியரின் பங்கு என்னவென்பதற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப்பிழைகளோடு புத்தகங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இஃதோர் அரும்பணியன்றோ.  வாசித்துப் பாருங்கள். புரியும்.   ஒன்று - "வானவில்லுக்கு எத்தனை நிறங்கள்?" வானவில் ஒரு கண்கவர் வளிமண்டல நிகழ்வு. குழந்தைகளாகட்டு...

புறங்கூறாமை எனும் அறம்..

படம்
ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும்,  சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப்  படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய  கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா...

சூப்பர்மேன் நினைவுப் படிகம்

படம்
(மாணவர்களுக்கான 'தினமலர் பட்டம்' இதழுக்காக எழுதியது) சௌ தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆப்டோ-எலக்ட் ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் (Optoelectronics Research Centre) சேர்ந்த விஞ்ஞானிகள் பல பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் நீடித்திருக்கும் திறன் கொண்ட தரவு சேமிப்பகத்தை உருவா க்கி டிஜிட்டல்  தரவு சேமிப்பில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார்கள்.    நன்றி: சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் அதிவேக (ஃபெமடோசெகண்ட்) லேசர் ரைட்டிங் மூலம் ஐந்து பரிமாணத்  தரவுகளை  கண்ணாடியில்  பதிக்கவும், மீட்கவும் செயல்முறைகளை உருவாக் கியுள்ளார்கள். குவார்ட்ஸ் கண்ணாடியில் உருவாக்கப்பட்ட நானோ கட்டுமானங்களினூடே இந்தத் தரவுகள் பதியப்படுகின்றன. ஒரு படிகத்தில் 360 டெராபைட்டு தரவு கொள்திறன் கொண்ட இந்த 5-D சேமிப்பகம் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங் கக்கூடிய அளவிற்கு வெப்ப உறுதித்தன்மை கொண்டது. அறை வெப்பநிலையில் 13.8 பில்லிய...

காந்தியம் தோற்கும் இடங்கள்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான், என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னை காந்தியவாதியாக பாவித்தார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. வரலாற்றுப் புத்தகங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே. எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாகதான் இருந்தது; அவர்மீதான விமர்சனங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழு...

மொத்தக் குருதியாலும்..

படம்
ஜெ யமோகனின் " இந்த இரவு இத்தனை நீளமானதென்று... " என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு.  அ ன்பு ஜெயமோகன், "தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய  "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.    2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்...

சித்தி (Siddhi)

படம்
இ லக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் 'சிறுகதை'. இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் சிறுகதை என்றால் சிறிய கதை என்றே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடும். 'சிறுகதை என்றால் என்ன?' என்பதை பல இலக்கிய மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை ஓரளவுக்கு வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளும் பொழுதெல்லாம் "கல்லாதது உலகளவு" என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள். கடந்தமுறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள்.  வழக்கமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவேன். அதற்கென்றே தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கிவிடுவதுண்டு. ஏற்கனவே வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருந்ததால், அந்த முறை புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குப்  போகாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். "உங்களுக்காக நான் எடுத்த...