இடுகைகள்

கடவுளும் சாத்தானும்

படம்
ஐ ரோப்பாவுக்குள் எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் பெரும்பாலும் காரில் செல்வதே என் வழக்கம். மதிய உணவு முடித்துவிட்டு பெல்ஜியத்திலிருந்து கிளம்பினால், இடையே ஜெர்மனியில் தேநீர் பருகிவிட்டு, பிரான்சு நாட்டைக் கடந்து மாலை உணவுக்கு சுவிட்ஸர்லாந்துக்கே சென்று விடலாம். மேலும் எனக்கு காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் உறவுகளோடு சுற்றுலா சென்றுவிட்டு கடைசி நாள் வீடு திரும்பும் போது, "ஊர் செல்ல இன்னும் எவ்வளவு கிலோமீட்டர்கள்?" என்று எங்களுடைய சாரதி பாஸ்கர் அண்ணாவைக் கேட்டுக்கொண்டே வருவேன். தூரம் குறையவே கூடாது என்றும் வேண்டிக்கொள்வேன். எனக்கு  ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால்தான் இயற்கையில்கூட குளம் குட்டைகளைவிட, ஓடை ஆறு இவற்றின் மீதே எனக்கு அதிக ஈர்ப்பு. குளம் குட்டைகளில் அழுக்குகள் எளிதாகத் தங்கி விடும். யாராவது சுத்தம் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது. அழுக்கை அண்ட விடாது. பயணங்களின் போது வண்டி உருண்டு ஓடிக்கொண்டே இருக்க, மனதில் பல விதமான சிந்தனைகள் என் முன் வந்து கொட்டிக்கொண்டே இருக்கும். அப்போது மட்டும் எனக்கு...

எது முக்கியம்?

ப ணி நிமித்தமாக அவ்வப்போது ப்ரசல்ஸ் நகரிலுள்ள எங்கள் தலைமையகத்துக்குச் செல்வதுண்டு. ப்ரசல்ஸ் நகருக்குச் செல்லும்போது மட்டும் காரை எடுப்பதில்லை. ஐம்பது கிலோமீட்டர் தூரம்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று சென்றால் முப்பது நிமிடங்கள்தான் பிடிக்கும். வார நாட்களில் காலை எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் இரண்டிலிருந்து இரண்டரை மணிநேரம் ஆகிவிடுகிறது. அதனால் ப்ரசல்சுக்குச் செல்லும்போது மட்டும் இரயிலில் பயணிப்பது வழக்கம். காரை தீனன் இரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம். இருபத்தைந்து நிமிட பயணம்தான். ப்ரசல்ஸ் நோர்டு இரயில் நிலையத்திலிருந்து நான் பணிபுரியும் நிறுவன பேருந்துகள் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பணியாளர்களை அழைத்துச் செல்லும். என்றைக்காவது காரில் போகலாமென்று தோன்றினாலோ, குளிர் அதிகமாக இருந்தாலோ, பயிற்சி வகுப்புகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்றாலோ மட்டுமே காரை எடுப்பேன். இரயிலில் போவதில் இருக்கும் இன்னொரு அனுகூலம் - புத்தகம் வாசிக்க முடிவது. காரை ஒட்டிக்கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்தான் பாடல் கேட்பது? இத்தனைக்கும் ப்ரியா அடிக்கடி எனக்குப் பிடித...

கொஞ்சம் சினிமா.. கொஞ்சம் அரசியல்..

கு ழந்தைகளுடன்  அமர்ந்து பார்க்க ஏதுவான படங்களைப் பரிந்துரைக்கச் சொன்னான் நண்பன். நான் கொடுத்த பட்டியலில் தமிழ் படங்கள் இல்லாதது கண்டு அதைப் பற்றி கேட்டான். பொதுவாகவே தமிழ் படங்களில் பெரியவர்களுக்கே நல்ல படங்கள் கிடைப்பது கடினம். தமிழில் சமீபத்தில் வெளியான சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் நான்கைந்து தேறும். அவ்வளவே. சமீபத்திய இயக்குநர்கள் சிலர் நம்பிக்கையளிக்கிறார்கள். அவர்களை வணிக தமிழ் சினிமா உலகம் விழுங்காதிருக்கவேண்டும். பெரும்பான்மையாக தமிழ் சினிமா காதலை விட்டு இன்னும் வெளியே வரவேயில்லை. விதம் விதமாக காதலைப் படம்பிடிக்கிறார்கள். இல்லையென்றால் நாயகன் நரம்பு புடைக்க வெறித்தனத்துடன் பத்துப் பேரைப் பந்தாடும் ரகம். மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு நேர்காணலில் இதையே வருந்திச் சொல்லியிருந்தார். நான் வணிக திரைப்படங்களுக்கு எதிரியல்ல. அவற்றையும் ரசிக்கிறேன். ஆனால், பத்து வணிக திரைப்படங்கள் வருகிறதென்றால், அதில் குறைந்தபட்சம் இரண்டாவது நல்ல திரைப்படங்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். மலையாளத்தில் அதுதானே நடக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் வாழ்க்கையைக் காண்பிக்கவேண்டும் என்பது என்...

இன்பத்தை இசை யாழே

படம்
எ ன் வாழ்க்கையில் நான் மிகவும் பலவீனமாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று. உண்மையில் அதுபோன்ற பலவீனமான தருணங்கள்தான் இன்றைய என்னுடைய பலத்துக்கே காரணமாயிருக்கிறது.என்னுடைய  பலவீனத்தைக் கூட வெட்கமின்றியும் தயக்கமின்றியு ம் பேசும் இன்றைய துணிவுக்கும் அவையே காரணம். நூறு புத்தகங்கள் வாசிப்பதால் கிட்டும் ஞானத்தை ஒரு துன்பகர நிகழ்வு எளிதாக போதித்து விடும். அதே சமயம் என்னை அந்தத் தருணங்களில் தம் தோள்களில் தாங்கிப் பிடித்திருந்தவர்கள் இல்லாவிடில் இன்றைக்கு நான் ஏது? 'இன்றைய நான்' ஏது? அந்தத் தருணங்களையும், அந்த நல்மனங்களையும் நினைத்துப் பார்த்து என்னுடைய மீள்நினைவுகளை அவ்வப்போது எழுதி வருகிறேன். அவற்றில் சிலவற்றை அப்போதே பகிர்ந்துவிடுகிறேன். சிலவற்றை அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். பலவற்றை பகிராமல் கணினிக்குள்ளேயே பூட்டி வைத்து அதற்கான காலம் வரட்டும் என்று காத்திருக்கிறேன். அவற்றையெல்லா ம் தொகுத்து 'மீள்நினைவுகள்' என்று நூலாகவும் வெளியிடலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் ...

தீர்க்கதரிசனம்

இ ன்று அசோகமித்திரனின் நினைவுநாளில் அவருடைய "படைப்பாளிகள் உலகம்" வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக தற்செயலாக ப்ரியா இந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அதில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். "நிச்சயம் வாசிக்கவும்". இதை அவர் எழுதியது 1980-ஆம் ஆண்டு. கட்டுரைக்கு கிட்டத்தட்ட என் வயது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் என் நண்பர் பாபுவிடம், "We were better off with All India Radio" என்று கூறினேன். அது தவறு என்பது போல ிருக்கிறது இந்தக் கட்டுரை. நான் சமீபத்தில் எழுதியிருந்த "போதிதர்மரும் தங்கமீன்களும்" கட்டுரையில் வரும் ஒரு சில கருத்துக்களை அன்றே பதிவு செய்திருக்கிறார். காலங்கள் மாறிவிட்டது. கருத்து மாறவில்லை; மாறவேண்டியதில்லை. மாற்றம் வரவேண்டியது மனங்களில். எனவே இந்தக் கட்டுரையில் வாட்சேப், பேஸ்புக் போன்ற சில வார்த்தைகளைச் சேர்த்து மறுபிரசுரம் செய்து விடலாம். அதுவும் அந்தக் கடைசி வரி - “தீர்க்கதரிசனம்".  /..... ஒரு பிரமுகரின் ஒவ்வொரு அம்சத்தையும் உடனுக்குடன் அத்தாட்சியோடு உலகுக்குத் தெரிவி...

“எழுத்தில் தொலைதல்” - ப்ரியா இளங்கோ

ம களிர் தினத்தன்று மனைவியிடமிருந்து ஒரு கடிதம். ப்ரியா, என்னுடைய தோழி ஒருவருக்கு நேற்று எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பியிருந்தாள். இனி அதிகம் எழுதப் போகிறாளாம். இனி நமக்கு வேலை இல்லை. மகளிர் தினத்தன்று எனக்கு "காட்டாறு" என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி! தன் மீதும் என் மீதும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகவும் இருப்பதாலும், ப்ரியா எழுதியுள்ள முதல் படைப்பாக (கடித இலக்கிய வகைமையில் சேருமன்றோ?) இருப்பதாலும் முகநூலிலும் இங்கும் பதிவு செய்ய விழைகிறேன். "எழுத்து ஒரு அராபிக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவிட்டால், அப்பப்பா! என்னென்ன வேகங்கள், அழகுகள், தொடுவானமும் தாண்டிய தூரங்கள்!" - லா.ச.ரா இனி ப்ரியாவின் கடிதம்.. அ ன்புள்ள தேவிக்கு, என்னைப் போன்றதொரு ஆர்வக்கோளாறு மற்றும் கற்றுக்குட்டியின் தமிழ் எழுத்தைப் பாராட்டியும் ஊக்குவிக்கவும் வேறு செய்கிறீர்கள். நன்றி. இருப்பினும் எழுத்தில் என் எல்லை மிக மிகக் குறுகியது என்று நான் அறிவேன். “நீ ஒரு பக்கம் எழுத வேண்டுமானால் 100 பக்கங்களை முதலில் வாசி” என்பார் மாதவன். தமிழ் இலக்கியமோ உலக...

மாயபுரி

(சிறுகதை) நா ன் எங்கோ வட இந்தியாவில் இருக்கிறேன். எந்த மாநிலம் என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தெருமுனையில் வைக்கப்பட்டிருக்கும் இருபதடி உயரப் பதாகை ஒன்று அந்த ஊரின் பெயர் மாயாபூர் என்று எடுத்துச் சொல்லுகிறது. ஊரே கோலாகலமாக இருக்கிறது. ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, தெரு முழுதும் சிவப்புக் கம்பளம் விரித்து வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அந்த ஊருக்கு உரையாற்ற வருகிறாராம். காதை செவிடாக்கும் அளவுக்குக் கோஷங்கள், பட்டாசு வெடிச்சத்தங்கள் எல்லாமும் கேட்கிறது. ஆனால் யாரையுமே அங்கு காணமுடியவில்லை. ஊரே வெறிச்சோடிப் போயிருக்கிறது. திருவிழாக்கோலம் பூண்ட ஊரில் திடீரென்று ஒரு கலவரம் வெடித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தைத் தருகிறது. பிறகு இந்தச் சத்தங்கள் மட்டும் எங்கிருந்து வருகின்றன என்று மோடி உரையாற்றப் போகும் அரங்கத்துக்கு வெளியே நின்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது தொலைவில் ஒருவர்  ஜீப்பில் நின்றபடி கையசைத்துக்கொண்டே வருவது தெரிகிறது. அவர் மோடியேதான். பிரதமர் தனியாக வந்துகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி யாருமே இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள்கூட...