இடுகைகள்

படைப்பாளியும் எதிர்ப்புகளும்

முகநூலில் என்னுடைய இயக்கம் அதிகரித்திருப்பதை அங்கு என்னைத் தொடரும் உணர்ந்திருக்கலாம். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். 'பாலில் விஷம்' என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லை. ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருந்தேனே ஒழிய என்னுடைய அன்றாட நடப்பு குறிப்புகள் எழுதுவதை என்றுமே நிறுத்தியதில்லை. முகநூலை எனது நாட்குறிப்புச் சுவடியாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் இங்கே நான் பகிரும் பதிவுகள் என்னுடைய நாட்குறிப்புச் சுவடியின் ஒரு பகுதி மட்டுமே. நான் இதுவரை எழுதியிருக்கும் அத்தனையுமே பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதற்கு என்னைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று எண்ணுகிறேன்.  நண்பர் வெங்கட் ஒருமுற...

காஃப்கா கஃபேவும் ப்ரூகல் பாதையும்..

படம்
நண்பர்கள் பாபு, ஆலினுடன் ப்ரசல்ஸ் நகர வீதியில் உலவிக் கொண்டிருந்தபோது ஒரு அருந்தகத்தின் பெயர் என் கவனத்தை ஈர்த்தது - "காஃப்கா கஃபே". அருந்தகத்துக்கு காஃப்காவின் பெயரா என்று ஆச்சர்யப்பட்டோம். "நீ காஃப்காவை வாசிக்கிறாயா? ஹெவி ஸ்டஃப் ஆயிற்றே!" என்றார் ஆலின். நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் எனக்கு காஃப்கா, அல்பேர் காம்யு போன்ற எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதே என் பெல்ஜியம் நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்கெல்ல ாம் இந்தியாவில் என்ன வேலை என்பது போன்று பார்வை வீசியிருக்கிறார்கள். காஃப்காவின் "உருமாற்றம்" (The Metamorphosis) பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். அதைவிடவும் அவருடைய "தீர்ப்பு" (The Judgement) கதைதான் சிறந்ததென்பது என் தீர்ப்பு. என்னை உலுக்கிப்போட்டதொரு இலக்கியப் படைப்பு அது.  உண்மையிலேயே இந்த அருந்தகத்துக்கு ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்களா என்றொரு சம்சயம் எனக்கு. நம்மூரில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் இவர்கள் பெயரிலெல்லாம் தேநீர் கடைகளைப் பார்த்து நமக்குப் பழக்கமில்லையே. சாரு ந...

நூறு செம்மறி ஆடுகள்

படம்
ப்ரஸல்ஸ் விமான நிலையத்துக்கு ஒரு மாத காலத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய சுவாரசியமான செய்தி ஒன்றை இன்று வாசித்தேன். விமான நிலையத்துக்கு அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் வந்து போவார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. ஏனெனில் இந்த முறை விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மேன்மைவாய்ந்த நூறு செம்மறி ஆடுகள்.  விமானங்கள் புறப்படும்போதும் தரையிறக்கத்தின் போதும் எழும்பும் சத்தம் வெளியில் கேட்க ாமலிருக்க, விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மண்மேடுகளில் வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் பாரிய புல்லறு பொறிகளைக் கொண்டு புல்மட்டத்தை சரிசெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து அந்தப் பணியைச் செய்வதற்கு செம்மறி ஆடுகளை வரவழைத்துள்ளார்கள். ஜூன் மாத இறுதி வரை அவை அங்கு மேய்ச்சலில் இருக்கும். புல்வெளி மேடுகளுக்கான பராமரிப்பு வேலையும் ஆயிற்று. ஆடுகளுக்குச் சுவையான விருந்தும் ஆயிற்று. இது ஒரு கால்நடை நட்புத் தீர்வு மட்டுமல்ல, நல்லதொரு சூழல் நட்புத் தீர்வும்கூட.  இதைப் பற்றி நண்பர் கார்த்திக்கிடம் மாலை ...

சிலைகளும் குறிப்புகளும் (1)

படம்
ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில் நடந்து செல்லும்போது கண்களுக்கு விருந்தாகும் எளிமையான நினைவுச்சின்னங்கள், சிற்ப வேலைப்பாடுகளில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லையென்றாலும் சிலவற்றுக்குப் பின்னால் சுவாரசியம் தாங்கிய கதைகளும் இருக்கவே செய்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரேக்கக் கடவுளான ஜீயஸ் காளையாக உருமாறி வந்து ஐரோப்பாவைத் தூக்கிக்கொண்டு செல்லும் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் பெயர்காரணத்தை விளக்கியிருந்தேன். அந்தப் படம் பெல்ஜியத்திலுள்ள லூவன் நகரில் எடுத்தது. அங்குதான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வசித்தேன். என் சொந்த ஊரை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அதே அளவுக்கு லூவனையும் நேசிக்கிறேன். மாணவர்களின் நகரமான லூவன் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளின் கதைக்களமாக இருந்திருக்கிறது என்பதை வாசித்தவர்கள் அறிவீர்கள்.  ஊசிமுனையில் குத்தப்பட்ட வண்டு, நிர்வாண கோலத்தில் மிதந்துகொண்டிருக்கும் பெண், தலையில் தண்ணீரை ஊற்றியபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், ரொட்டி விற்பவன் என்று சாதாரண மனிதர்களுக்கான நினைவுச்சின்னங்களை லூ...

தேர்தல் தினம் and some thoughts

படம்
இ ன்றைக்கு இங்கே பெல்ஜியத்தில் தேர்தல்.  ப்ரஸல்ஸ் நகரில் ஓரிரு பதாகைகளைப் பார்த்தேன். நான் வசிக்கும் தீனன் நகரில் அதையும் காணமுடியவில்லை. இதுவரைக்கும் ஒரேயொரு பரப்புரையை பார்க்கும் பாக்கியம்கூட கிட்டவில்லை. தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லை. எந்தவொரு கட்சிக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல் கிடையாதாம். முகநூலிலும் இந்த பெல்ஜியம் நண்பர்கள் ஒரு மீம்ஸ்கூட போடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். அட மீம்ஸ் வேண்டாம். ஒரு சின்ன நிலைத்தகவல்? ஒரே ஒரு வலதுசாரி கட்சி மட்டும் முகநூல் விளம்பரங்களில் "முதலில் நம் மக்கள் " (ஏர்ஸ்ட் ஆன்ஸ மென்ஸென் ) என்று நம்மூரைப் போன்றே முழக்கமிட்டு வருகிறார்கள். அதிலும்கூட அப்படியொரு சாத்வீகம். மற்ற கட்சிகளின் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு எனக்கென்னவோ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரப் படங்கள் போன்று தெரிகிறது. பார்த்த மாத்திரத்திலேயே கொட்டாவி வருகிறது. ஒரு உக்கிரம் வேண்டாமா? நல்லவேளையாக இன்று தேர்தல் என்பதை மறக்கவில்லை. தேர்தல் என்றால் ஒரு கொண்டாட்டமாக இருக்கவேண்டாமா? பைசா செலவில்லாமல் தேர்தலை நடத்திக்கொண்டிருக்கும் இது என்ன விந்தையானதொரு ஜனநா...

கடத்தியவளும் கடத்தப்பட்டவளும்

படம்
நே ற்று காலை அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு இளம் பெண் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றாள். ஆனால் அது பாதசாரிகள் கடக்கக்கூடிய இடமில்லை. நல்லவேளையாக நான் குறைவான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்திவிட்டேன். அவள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் நடைமேடைக்கே திரும்பிவிட்டாள். நான் புன்னகைத்துக்கொண்டே 'கடந்து செல்லுமாறு' அவளுக்கு சைகை செய்தேன். குற்றவுணர்ச்சியும் அதனால் விழைந்த வெட்கமும், நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் கலந்ததொரு புன்னகையை என் மீது வீசிக்கொண்டு என்னைப் பார்த்து எதையோ சொல்லியபடி கடந்து சென்றாள். பின்காட்டியூடே மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன். அதே புன்னகையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். அதன் பிறகு அந்தப் புன்னகை சூடிய முகம் நேற்றைய நாள் முழுவதும் என் கண்களை விட்டு அகலவில்லை. எனக்குள் மகிழ்ச்சியை உற்பத்தி செய்துகொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சி என் செயல்களில் வெளிப்பட்டது. மின்னஞ்சல்களுக்குக்கூட பதில்களை புன்னகையோடு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு செல்ஃபி எடுத்துப் பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக...

உங்கள் 15% என்ன?

படம்
செ ன்னையில் ஒருமுறை அப்பாவுடன் அவருடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வுகளுக்காக தீவிரமாக என்னைத் தயார் செய்துகொண்டிருந்த காலம். விழாவுக்கு வந்திருந்த நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அப்பாவின் நண்பர். நான் எப்போதும்போல் அசட்டுத்தனமாக அவரிடம், "இன்றைய அரசியல் சூழலில் எப்படி உங்களால் நேர்மையுடன் பணியாற்ற முடிகிறது" என்று கேட்டேன். அவரோ புன்னகைத்தபடி, "நல்ல கேள்வி. நம் சாலைகளை எடுத்துக் கொள்வோம். போக்குவரத்து சமிக்ஞையில் மஞ்சள் விழுந்தவுடன் முடிந்தால் வண்டியை நிறுத்திவிட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் இதை யார் இங்கு பின்பற்றுகிறார்கள்? அவ்வளவு ஏன், சிவப்பு விழுந்தால்கூட பலர் நிற்பதில்லை. நமக்கு முன்னால் விதியை மதிக்காமல் சென்று கொண்டிருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அது நம் கையில் இல்லை. ஆனால், நாம் வண்டியை நிறுத்திவிட்டால் நமக்குப் பின்னால் வருபவன் நின்றே ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை, அவன் நம்முடைய வாகனத்தை இடிக்கலாம...