இடுகைகள்

சாத்தானின் அப்பம்

படம்
இ யேசு கிறித்துவை அதிகமாக நேசித்த சீடன் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாஸே. தன்னுடைய ஜீவனை உலகுக்காக தியாகம் செய்வதாக அறிவித்த கிறித்துவுக்காகத் தன் ஜீவனைத் தந்தவன் யூதாஸ் மட்டுமே. அத்தகைய நல்மனம் துரோகிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது. உண்மையில் துரோகிகள் நேசிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் அன்பானவர்கள்; நண்பர்கள். தம் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் தங்களை நேசிப்பவர்கள். துரோகத்துக்கான காரணம், தங்கள் மீதான இந்த அன்பின் மிகுதிதான். துரோகத்தின் ஆதாரம் வெறுப்பு அல்ல. ஒருவன் தன் மீது தான் கொண்ட அன்பு; தற்காமம். தற்காமம் சாத்தானின் உணவு. அது நிரம்பியிருக்கும் இடத்தில் சாத்தான் பெரும் பசியுடன் நுழைகிறது. இயேசு கிறித்து அப்பத்தைக் கொடுத்ததால்தான் யூதாசுக்குள் சாத்தான் நுழைந்தது என்றுரைப்பது அறிவீனம். உண்மையில் சாத்தானுக்கான உணவு யாரிடம் அதிகம் இருக்கிறது என்பதையே பிற சீடர்களுக்கு கிறித்து காட்டிக் கொடுக்கிறார். இறுதி இராவுணவின் போது, "நான் உங்களை நேசிப்பது போல, நீங்கள் உங்களை நேசிப்பது போல, பிறரை நேசியுங்கள்" என்று அவர் கூறியது...

மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிகள்

படம்
ராம், ஆன்ட்வெர்ப், பெல்ஜியம். கேள்வி: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஐந்து முக்கியமான வழிகள்? பதில்: நூல்களை வாசித்துவிட்டு நிறைய பேர் ஐந்து-பத்து என்று இதுபோன்று பட்டியல்களை வெளியிடுகிறார்கள், ராம். சுயமேன்மை நூல்களை ஒதுக்கி விட்டு இலக்கியத்துக்குள் நான் நுழைந்ததற்கான காரணமே இதுதான். அங்கு சிறிதளவேனும் உண்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் பட்டியலில், நான் உட்பட வழக்கமாக எல்லோரும் சொல்லும் நூல்களை வாசித்தல், திரைப்படம் பார்த்தல், பயணங்கள் புரிதல், அறச் செயல்கள், தியானம் செய்தல் போன்ற வழிகளையெல்லாம் பட்டியலிட விரும்பவில்லை. அவையெல்லாம் போலச் செய்பவர்களுக்கும், உறுதிப்படுத்தல் சார்பு மனநிலையுடையவர்களுக்கும் (Confirmation Bias) ஒருவேளை திருப்தியளிக்கலாம். நாற்பது வருடங்களாக தொடர்ந்து தியானம் செய்து "அமைதி கிலோ என்ன விலை?" என்று கேட்கும் மூர்க்கர்களையும் பார்த்திருக்கிறேன். தியானம் என்றால் என்னவென்றே தெரியாத நண்பர்கள் சிலர் சாந்த சொரூபிகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் கண்ணுற்றிர...

கவிஞர்களின் பணியகம்

பெ ல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் இங்கே எந்த ஊருக்குச் சென்றாலும் ஆங்காங்கே "POETSBUREAU" இருப்பதைக் கண்டு வியந்தேன். டச்சு/ஃபிளம்மிய* மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து ஒற்றைச் சொல்லாக்கும் வழக்கம் உண்டு. எல்லா மொழிகளிலும் இந்த வழக்கம் உண்டெனினும், நானறிந்த வரையில் டச்சு மொழியில் அப்படி உருவாக்கப்பட்ட சொற்கள் மிக அதிகம். எளிய உதாரணம்: "Dansschool". "Dans" என்றால் நடனம். "school" (ஸ்கோல்) என்றால் பள்ளி. ஆனால் "Dans School" என்பதை "Dansschool" என்று ஒற்றைச் சொல்லாகத்தான் எழுதுவார்கள். இங்கே கல்லூரியில் டச்சு வகுப்புகளுக்கு செல்வதற்கு முன்பு வரை எனக்கு ஒரு சில அடிப்படையான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நான் மேற்சொன்னது போல் இரண்டு சொற்கள் மட்டுமல்ல, நான்கைந்து சொற்களையெல்லாம் சேர்த்து ஒரு சொற்றொடரளவுக்கு நீண்ட சொற்களெல்லாம் உண்டு. இவையனைத்துமே பயன்பாட்டிலுள்ள சொற்கள். இன்னொரு முக்கியமான விஷயம், மேற்சொன்ன “Dansschool” என்கிற சொல்லை, “Dans School” என்று பிரித்து எழுதலாகாது. அப்படித்தான் "Poetsbureau" என்கி...

கெக்கெ பெக்

சிறுவயதில் யாராவது கோமாளித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரித்தால் என்னுடைய பாட்டி, "எதுக்குடா அவன் இப்படி கெக்கே பெக்கெனு சிரிக்கிறான்" என்பாள். அதற்குப் பொருள் என்னவென்று பாட்டியிடம் கேட்டதில்லை. கிறுக்குத்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பதைத்தான் அப்படி சொல்கிறாள் என்றே புரிந்து கொண்டோம். வியப்பு என்னவென்றால், "கெக்கெ பெக்" (Gekke Bek) என்பது டச்சு மொழியில் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் ஒரு மரபுவழி சொற்றொடர். பெல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் நான் செய்த முதல் காரியம், கல்லூரியில் சேர்ந்து மாலைவேளைகளில் டச்சு மொழி பயின்றதுதான். அதில் சிறப்பு என்னவென்றால், இங்கு மொழி வகுப்புகளை பிறிதோர் மொழியின் துணையின்றியே எடுக்கிறார்கள். அதனாலேயே புகைப்படங்களையும் வரைபடங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சில சமயங்களில் ஆசிரியர்கள் நடித்தும் காட்டுவார்கள். இதற்கான காரணங்களாக நான் காண்பவை இரண்டு: 1. பிற மொழிகளின் உதவியோடு ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்கும் போது நமக்குள் எப்போதும் ஒரு ஒப்பீடு நடந்து கொண்டே இருக்கும். ஆங்கிலத்தைக் கொண்டு டச்சு மொழியைக் கற்றுக் கொள்வது ம...

"இயக்குநருடன் ஒருநாள்" ஆவணப்படம்

படம்
அ ப்பாவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்பது என் வெகுநாள் கனாவாக இருந்து வந்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பொள்ளாச்சி பலூன் திருவிழாவுக் காக தாயகம் வந்தபோது அது சாத்தியமானது. ஆவணப்படம் எடுத்த அன்றைக்கு முந்தைய நாள் நள்ளிரவுதான் ஊருக்கு வந்தேன்.   அடுத்தநாள் பெயருக்கேற்றவாறு ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். படப்பிடிப்பு  என்பது பெரிய சொல். கைப்பேசியைக் கொண்டு நானே பதிவு செய்தது. பயன்படுத்திய கிம்பலிலும் மோட்டார் பிரச்சினை இருந்தது. சரியாக வேலை செய்யவில்லை. மைக் எதுவும் பயன்படுத்தவில்லை.  பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை. மனைவி   ப்ரி யாதான்  கேள்விகளைக்  கேட்டாள் .  என்னென்ன கேள்விகள்  கேட்கலாம்   என்பதை  விமானத்தில் தாயகம் வரும் போது  ப்ரியாவும்   நானும் பேசிக் குறிப்பெடுத்துக் கொண்டோம் . மேலும் பழைய வாழ்க்கை என் நினைவுகளில் இருந்து அகலவில்லை. அதனால் சிரமமிருக்கவில்லை.  ...

ஓஷினென் ஏரி

படம்
த ற்போது "கான்டெர்ஸ்டிக்" என்கிற அழகிய சிற்றூரில் தங்கியிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல உறக்கம் அரிதாக வாய்த்திருக்கிறது. நேற்று காலை எழுந்தவுடன் சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன். மலைகளின் பின்னணியில் ஒரு சிறிய அழகிய தேவாலயம் தெரிந்தது. சாளரத்தை திறந்த சமயம் தற்செயலாக ஆலயமணி அடித்தது. வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை (டின்னிட்டஸ் தவிர்த்து). பிறகுதான் அது தந்த உத்வேகத்தில் "நீலக்கன்னியின் கண்ணீர்" பதிவை எழுதி முகநூலில் பதிவிட்டேன். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு உப்பரிகையில் நின்று காலை நேர சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்த பனிமலையையும், நீல வானத்தையும், தூரத்தில் தெரிந்த அருவியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். கையில் இந்தியத் தேநீர். வேறு என்ன வேண்டுமெனக்கு! அம்மாவை வாட்சேப்பில் அழைத்து இந்தக் காட்சிகளைக் காட்டினேன். பிறகு சிற்றுண்டி அருந்திவிட்டு முகநூலில் என்னுடைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு பதிலளித்துவிட்டு, நண்பர்களுடன் அளவளாவிவிட்டு, நேற்றைய நாளைத் துவக்கினோம்.  நேற்றைய திட்டம் "ஓஷினென்ஸீ" (Oeschinensee) என்று ஜெ...

நீலக் கன்னியின் கண்ணீர்

படம்
நே ற்று மாலை ப்ளாவ்ஸீயைப் பார்க்கப் போயிருந்தோம். "ப்ளாவ்ஸீ" (Blausee) என்றால் நீலக்கடல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெர்மன் மொழியில் "ஸீ" என்றால் ஏரி. எனவே, ப்ளாவ்ஸீ என்பதை "நீல ஏரி" என்று மொழிபெயர்க்கலாம். "கான்டெர்" பள்ளத்தாக்கில் "கான்டெர்க்ரூன்ட்" என்கிற இடத்தில் உள்ளது இந்தக் கண்கவர் ஏரி. அவ்வளவு ஒன்றும் பெரிய ஏரியெல்லாம் இல்லை. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற ஏரிகளான தூன், ப்ரீன்ஸ், லேமான் போன்ற ஏரிகளுடன் ஒப்பிட்டால் ப்ளாவ்ஸீயை குளம் அல்லது குட்டை என்றே சொல்லவேண்டும். "லூஸான்" நகரைச் சுற்றியுள்ள "லேமான்" ஏரிதான் ஐரோப்பாவிலேயே ஆகப் பெரிய நன்னீர் ஏரி.  ப்ளாவ்ஸீயின் சிறப்பு அதன் பளிங்கு போல் தெளிந்த வானீல நிற நீர். இதை வழக்கமான சொல் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முற்றிலும் உண்மை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தின் முடிவில் உருவான பனிச்சரிவின் காரணமாக உருவான ஏரி என்கிறார்கள். ஏரியை ஒட்டி "கான்டெர் ஆறு" ஓடுகிறது. ஏரியைச் சுற்றிலும் சதா மேகங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் மலைகள் சூழ...