அம்மாவின் காமெடிகள் (3)

அம்மாவிடமிருந்து வாட்சேப்பில் அழைப்பு வந்தது. எதற்கு என்பது நன்றாகத் தெரியும். அன்றைக்கு முன்தினம் இரவு முகநூலில் என்னுடைய "டின்னிடஸ் டு டீட்ஸே" பதிவைப் பகிர்ந்திருந்தேன். வாசித்துவிட்டு எப்போதும் போல் பதறி அடித்துக்கொண்டு என்னை அழைத்தாள். 
"என்னடா கண்ணா அது என்னமோ நெஞ்சுவலின்னிட்டு?"
"அத விடுமா. டாக்டரை பாத்தாச்சு. சிம்பிள் ப்ராப்ளம்தான்" 
"உன்னை நம்பமாட்டேன். நீ ஊருக்கு உடனே கிளம்பி வா. நம்ம டாக்டர்கிட்ட காமிக்கலாம்" 
"மா… இங்க சோஃபி நம்ம டாக்டர் மாதிரியே நல்ல டாக்டர் மா."
"இல்ல டா கண்ணா.. நம்ம டாக்டர் மாதிரி வராது. அந்த ஊரே சரியில்ல. அங்க போனதுக்கப்புறம்தான் உனக்கு புதுப்புது வியாதியா வருது. இங்க வந்துடுன்னு சொன்னா கேட்க மாட்டேங்குற. இங்க டெல்லில இருந்தாக்கூட உடனே வந்து பார்த்திருப்பேன்."
"இந்த டயலாக ஆயிரம் முறை சொல்லியாச்சு. செண்டி போடாத மாம்ஸ். நாட்ல எலெக்ஷன் நடக்குது. அது எவ்ளோ முக்கியமான விஷயம்.. அதப் பத்தி பேசறத விட்டுட்டு.." 
"ஒட்டு போட்டாச்சு பா. நம்ம வேல முடிஞ்சுது. இதுக்கு மேல நம்ம கைல என்ன இருக்கு?"
"யாருக்கு மா ஒட்டு போட்ட?"
"வேணாம்பா. நீ திட்டுவ."
"சும்மா சொல்லுமா.. ப்ளீஸ்" 
"டார்ச் லைட்டுக்குத்தான்"
"அம்மாமாமாமாமாமாமாமாமாமாமா….." 
"ஏம்பா.. தப்பு பண்ணிட்டேனா"
"அட அது இல்லம்மா. உன் ஒட்டு. உன் இஷ்டம். ஆனா அங்க பேஸ்புக்ல உன் ஹஸ்பண்ட் உறுதிமொழியெல்லாம் எடுத்து, ஒரு நாளைக்கு நூறு ஸ்மேர் கேம்பெய்ன் மீம்ஸ் எல்லாம் போட்டு கூவிக் கூவி காவிக்கு ஒட்டு கேக்கிறார். நீ இப்படி பண்ணிட்டியே மாம்ஸ்?" என்று கூறி உரக்கச் சிரித்தேன்.
"அவங்க ஒரு அம்பது பேர் அவங்களுக்குள்ளயே சிரிச்சி, அவங்களுக்குள்ளயே கொதிச்சி, அவங்களுக்குள்ளயே பெருமிதப்பட்டு என்னமோ பண்ணிட்டு இருக்காங்க. அதெல்லாம்தான் நான் பாக்கறதே இல்லையே. உக்கிரம் நமக்கு எப்பவுமே ஆகாது பா.. அவங்களும் வேண்டாம் இவங்களும் வேண்டாம்.. அதான் மய்யமா டார்ச் லைட்டுக்கு குத்திட்டேன்"
"சுத்தம். அப்ப அந்த 24 பை செவன் பிரச்சாரமெல்லாம் வீட்லயே எடுபடலயா?"
"வீடு இல்ல பா.. தெருன்னு சொல்லு. எதிர்வீடு பக்கத்து வீடுகள்னு எல்லாருமா சேர்ந்துதான் இத முடிவு பண்ணோம்."
"அட்டகாசம் போங்கோ.. கில்லாடிகள் நீங்கல்லாம் சேர்ந்து ஒரு வகைல கமலுக்கே ஷாக் கொடுத்துடுவீங்க போல இருக்கே. என்ன ஆகப் போகுதோ?"
"கமல் ஷாக் ஆகிறாரோ இல்லையோ. தயவுசெஞ்சி இவர்கிட்ட மட்டும் சொல்லிடாதப்பா. ஷாக் ஆயிடுவார்"
"கண்டிப்பா சொல்லமாட்டேன் தாய்குலமே..”
நாராயண! நாராயண!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..