ஆதி அகதி


நாடிலான் வீடிலான்
உடுப்பிலான் உறவிலான்
பண்பிலான் பாங்கிலான்
அன்போ ஆத்திரமோ
அளவில் அதிகம் அவனிடம்
அலங்கோலம் அவன் கோலம்
பிணக்காட்டில் பித்தாட்டம்
திருவோட்டில் உணவுப்பண்டம்
அந்நாளில் அவன் பெயர் சிவனென்றார்
பின்னாளில் ஹிப்பி என்றார்
இந்நாளில் அகதி என்பார்
உலகத்தின் ஆதி ஹிப்பி
அவனேதான்
உலகத்தின் ஆதி அகதி
சிவனேதான்
உலகத்தின் ஆதி அகதி
நண்பன் எல் மெஹ்டியின் முடி திருத்தகத்தில் எழுதியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..