அம்மாவின் காமெடிகள் (1)

அம்மாவிடமிருந்து அதிகாலையிலேயே அழைப்பு. பதறி அடித்துக்கொண்டு எடுத்தால், "தூங்கிட்டு இருக்கியா பா?" என்று மறுமுனையிலிருந்து கூலாக ஒரு கேள்வி. 
"இந்த நேரத்துக்கு என்ன மா பண்ணிட்டு இருப்பேன். என்ன காலைல கால்?" என்றேன்.
"நம்ம ஊர்ல புதுசா கோட்ஸே மகான் கோயில் கட்டியிருக்காங்க. அப்பா அங்க போயிருக்கார். உன்கிட்ட சும்மா பேசலாம்னு கூப்பிட்டேன்"
"என்ன மா உளர்ர?" 
"ஆமா கண்ணா. 'காந்தியின் தீவிரவாதம்' என்கிற தலைப்பிலே பேசப் போறாராம்."
"வெயில் அதிகம்னு கேள்விப்பட்டேன். அதுக்காக இப்படியா.. கோட்ஸே கோயில்.. காலைலயே ஸ்பீச்.. காந்தி தீவிரவாதின்னுட்டு"
"உண்மைதான் கண்ணா. காந்தி தீவிரமா அகிம்சை பழகியவர். எதிலுமே தீவிரமா இருக்கறவன் தீவிரவாதிதானே. அதான் தீவிரவாதத்த ஒடுக்கறதுக்காக அவருக்கு சாத்வீகமா முக்தி கொடுத்த கோட்ஸே ஒரு மிதவாதி." 
"துப்பாக்கி ஏந்திய சாத்வீகமான மிதவாதி! சிவ சம்போ. தல சுத்துதுமா.. அப்போ இந்த இலக்கியத்துல தீவிரமா இருக்கறவங்கெல்லாம்?”
“நிச்சயம் தீவிரவாதிகள்!”
“ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இவங்க கூடவா?”
“சுத்த தீவிரவாதிகள்!”
“மனுஷ்ய புத்திரன்?”
“அவர் பயங்கரவாதி.”
“என்னமா இதெல்லாம்?”
"இலக்கியவாதிகள் ஆன்மாவைக் கொலை செய்கிறார்கள். நீ உடம்ப மட்டும் பார்க்கிற. உடலைக் கடந்து ஆன்மாவை தரிசிக்க நீ கொஞ்சம் முயலவேண்டும். கோட்ஸேதான் காந்தியோட ஆன்மாவை ஒண்ணுமே பண்ணலையே. அதனால் காந்தி சாகவேயில்லை. அவர் வளர்த்த தீவிரவாதம்தான் செத்திருக்கிறது. நீயே சொல்லு. இப்படி ஒரு தீவிரவாதியின் எதிரியாக இருந்தவர் என்ன வாதி?"
"என்னமா கமல் மாதிரியே பேசற?"
"இதுக்கும் கமலுக்கும் என்னப்பா சம்பந்தம்?"
"பேசறதே புரியலயே.."
"அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் கமல் பேசினா விடலைப் பிள்ளைகளுக்குக்கூட புரிகிறது".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..